கருப்பு வெள்ளை படங்களை கலராக மாற்றலாம் வாங்க | Convert black and white images to color

Convert black and white images to color
Welcome To Treasure Tamil
கருப்பு வெள்ளை படங்களை கலராக மாற்றலாம் வாங்க.

வணக்கம் நாம் இன்றைய பதிவில் மிகவும் பயனுள்ள தகவலை பற்றி தான் பாரக்க உள்ளோம்.நம் வாழ்வில் நாம் பல விசயங்களை இழந்திருபோம்.நம் வாழ்வில் நாம் திரும்ப பெற இயலாத ஒரு விசயம் உயிர்.ஆமாம் நம்மோடு உயிரோடு இல்லாத தாத்தா , பாட்டி , அல்லது கொள்ளுதாத்தா, கொள்ளுப்பாட்டி அவர்களின் கருப்பு வெள்ளை படத்தை கலராக மாற்றி அவர்களுக்கு ஓர் புது உயிர் கொடுப்போம் வாருங்கள்.

கலராக மாற்ற நினைப்பதனால் கருப்பு வெள்ளை படம் ஒன்றும் அவ்வளவு இலக்காரம் இல்லை,அதுவும் ஒரு வகை அழகு தான். இவ்வளவு ஏன் இக்காலத்தில் உள்ள இளைஞர்கள் கூட Filter என்று தங்கள் photo-களே தாங்களே கருப்பு வெள்ளையாக மாற்றி photo பார்த்து ரசிக்கிறார்கள்.

அதே போல் நம் தாத்தா, பாட்டி அல்லது உறவினர்கள் கருப்பு வெள்ளை படத்தை கலராக மாற்றி அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.

கருப்பு வெள்ளை படத்தை எப்படி கலராக மாற்றுவது என்று படியடியாக முழுமையாக மற்றும் தெளிவாக பார்க்காலாம் வாங்க.

1) முதலில் கீழே சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள "Hot Pot" என்ற வார்த்தையை கிளிக் செய்து அந்த தளத்திற்கு சென்று கொள்ளவும்.

2) எந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை கலராக மாற்ற உள்ளீர்களோ, அந்த தளத்தில் Upload என்று இருக்கும் அதை கிளிக் செய்து அந்த படத்தை கிளிக் செய்து கொள்ளவும்.

3) அதற்கு கீழ் colorization factor என்று இருக்கும் அதில் 12 , 15 , 18 , 20 , 25 இருக்கும் உங்கள் புகைப்படத்திற்கு ஏற்றார் போல் அதை தேர்ந்து எடுத்து கொள்ளவும்.

4) பின்னர் Size என்பதில் Limited என்பதை choose செய்து கொள்ளவும்.

5) பின்னர் Colorize என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.

சிறிது நேரம் காத்திருக்கவும் படம் கலராக மாறி கீழே அதற்கு கீழ் தோன்றும் படத்தை கிளிக் செய்து Download செய்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் அதே போல அனைவரும் தெரிந்து கொள்ள உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிரவும்.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும் என்னை TELEGRAM- ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்