How to check when shoutdown in my area
உங்கள் ஊரில் எப்பொழுது முழு நாள் Current cut என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
நமது அன்பான tamil treasure உறவினர்கள் அனைவருக்கும் Tamil treasure குழுவின் சார்பாக அன்பான வணக்கம்.
நமது ஊர்களில் மாதத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் current shutdown ஆகும் அதாவது காலை ஒன்பது மணி முதல் மாலை 5 மணி வரை current இருக்காது.இது மாதம் மாதம் அனைத்து ஊர்களிளும் நடக்கும் வழக்கமான ஒரு விசயம்.இதற்கான காரணம் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மின்சார வாரியம் ஒரு சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அதனால் இந்த shutdown என்ற பெயரில் மாதம் ஒரு முறை முழுவதுமாக current தடை செய்யப்படுகிறது.
சரி காரணத்தை தெரிந்து கொண்டோம்.
Shutdown என்றைக்கு என்று தெரிந்தால் நமது மொபைலை போன்கள் மற்றும் மடிகணினி போன்றவற்றிர்க்கு சார்ஜ் செய்து வைத்து கொள்வோம். அதாவது கொஞ்சம் முன் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
நமது ஊரில் எந்த நாளில் முழு நாள் current cut ஆகும் என்று நாம் எப்படி அறிந்து கொள்வது...?
வாருங்கள் நமது ஊர்களில் எப்பொழுது முழு நேர current cut ஆகும் என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
1) முதலில் கீழே உள்ளே லிங்கை கிளிக் செய்து அந்த தளத்திற்கு சென்று கொள்ளவும்.
2) அந்த தளத்தில் consumer info என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
3) அதில் scheduled outage என்பதை கிளிக் செய்யவும்.
4)பின்னர் உங்களின் மாவட்டம் என்ன என்று அங்கே கேட்க பட்டு இருக்கும் அதனை அங்கே உங்களின் மாவட்டத்தை கிளிக் செய்து sumbit என்று கொடுத்து கொள்ளவும்.
5) அவ்வளவு தான் அனைத்து தகவல்களும் உங்கள் திரையில் தோன்றும்.அதனை பார்த்து நம் ஊரில் எப்பொழுது shutdown என்று தெரிந்து கொண்டு நாம் முன் எச்சரிக்கையாக இருக்கலாம்.
சரி இந்த அளவிற்கு பயனுள்ள தகவலை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்.உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் பயன்பெற செய்யுங்கள்.
நன்றி.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.
என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்துகள்
Thanks for Read the posts