உங்க Chorme-ல உடனே இத பண்ணிடுங்க இல்லனா உங்க ஃபோன்ல இருக்க எல்லாம் காலி..!! |Immediately Update Your Google Chrome

Immediately Update Your Google Chrome

Welcome Treasure Tamil

என்னாது CHROME மூலமாக நம் மொபைல்களை HACK செய்றாங்களா...??
நீங்கள் ஒரு Google Chrome பயனராக இருந்தால், நீங்கள் உடனே "இந்த இரண்டு  விஷயங்களை" செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? அதை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

என்ன செய்ய வேண்டும்.. இந்த எச்சரிக்கை யாருக்கெல்லாம் பொருந்தும்?
இந்த எச்சரிக்கை ஆனது கிட்டத்தட்ட எல்லா கூகுள் க்ரோம் பயனர்களுக்குமே பொருந்தும் ஒரு பொதுவான எச்சரிக்கை ஆகும்.

நம் மொபைல் மற்றும் கணினியை  கட்டுப்படுத்தக்கூடிய dangerous Extension ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, அதில் இருந்து தப்பிக்க சில முக்கியமான விஷயங்களை உடனே செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது கூகுள்!

அதனால் என்ன ஆபத்து?
தி சன் (The SUN) வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, க்ளவுட்9 (Cloud9) எனப்படும் ஒரு புதிய அச்சுறுத்தல் (risk) ஆனது, மால்வேர் எக்ஸ்டென்சன்களில் மறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்கள் டிவைஸை கட்டுப்படுத்தலாம் மற்றும் அதில் உள்ள அக்கவுண்ட்களை மற்றும் பாஸ்வேர்ட்களை திருடலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

இதுல ஒரு நல்ல விஷயம்... கூடவே ஒரு கெட்ட விஷயம்!

க்ளவுட்9 தொடர்பான எச்சரிக்கையில் நமக்கு இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்.. இது அதிகாரப்பூர்வ க்ரோம் ஸ்டோரில் (Chrome save) கிடைக்கும் எக்ஸ்டென்சன்களின் வழியாக பரவவில்லை!

மாறாக இது இன்டர்நெட் வழியாக அணுக கிடைக்கும் பரந்த அளவிலான எக்ஸ்டென்சன்களில் பதுங்கி கிடக்கிறது. இது போலியான அடோப் ஃப்ளாஷ் பிளேயர் அப்டேட்களை புஷ் (Push) செய்யும் வலைத்தளங்கள் வழியாகவும் கூட உங்கள் டிவைஸிற்குள் நுழையும்!

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

க்ளவுட்nine மட்டுமல்ல இதுபோன்ற மேலும் பல ஆபத்தான எக்ஸ்டென்சன்களில் இருந்து தப்பிக்கவும், உங்கள் டிவைஸ்களை பாதுகாப்பாக வைத்து இருக்கவும், நீங்கள் 2 முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டும்!

முதல் வேலையாக  உடனே உங்கள் Google Chrome புதிய அப்டேட்டிற்கு மாற்றவும். ஒருவேளை உங்களுக்கு கூகுள் க்ரோம்-ஐ அப்டேட் செய்வது எப்படி என்று தெரியாதென்றால் கீழ்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்:


கூகுள் க்ரோம்-ஐ புதிய வர்சனுக்கு மாற்றம் செய்வது எப்படி?

- உங்கள் சிஸ்டமில் உள்ள க்ரோம்-ஐ திறக்கவும்.

- மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி ஐகானை (greater) கிளிக் செய்யவும்.

- அதன் பின்னர் தோன்றும் விருப்பங்களில் ஹெல்ப் (help) என்பதை கிளிக் செய்யவும்

- அதனை தொடர்ந்து அபௌட் கூகுள் க்ரோம் (about Google Chrome) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

- அங்கே "Chrome is updated" என்று இருந்தால் (அதாவது உங்கள் க்ரோம் லேட்டஸ்ட் அப்டேட்டில் தான் உள்ளது என்று இருந்தால்) அப்படியே விட்டு விடவும்.

- இல்லை என்றால், ரீலான்ச் (Relaunch) செய்யவும்.

இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
கூகுள் க்ரோமை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்த பின்னர், இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் - கூகுள் க்ரோமில் உள்ள ப்ரைவஸி அண்ட் செக்யூரிட்டி செட்டிங்ஸ்-க்கு (privateness and security settings) சென்று என்ஹான்ஸ்டு ப்ரொடெக்ஷன் (enhanced protection) என்கிற விருப்பத்தை 'ஆன்' (ON / allow) செய்யவும்!
அவ்வளவு தான், வேலை முடிந்தது!

வாசகர்களாகிய தாங்களும் இத்தகவலை உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், உங்கள் நண்பர்கள் என அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் நம்மிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் பயன்பெறுவார்கள். எனக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை, இதன் மூலம் மேலும் பல புதிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப முடியும்.

எனது வாசகர்களுக்கு  நான் எப்போதும் உதவ வேண்டும் என்பதே எனது முயற்சியாக இருந்து வருகிறது, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், தயக்கமின்றி என்னிடம் கேட்கலாம். கண்டிப்பாக அந்த சந்தேகங்களை தீர்க்க முயற்சிப்பேன்.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெணட் பாக்ஸ்யில் தெரிவிக்கவும்.

என்னை TELEGRAM-ல் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்